முன்னாள் கோவா முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகிய நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்த உத்பல் பாரிக்கர், பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தாா்.
இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பனாஜியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கட்சி சார்பில் அவருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு தீர்வுகளும், யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பாஜக என்பது ஒரு குடும்பம். குடும்பத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட உத்பல் பாரிக்கா் விருப்பம் தெரிவித்தாா். இந்தத் தொகுதியில்தான் அவருடைய தந்தை மனோகா் பாரிக்கா் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால், அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்த பாஜக, அந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அனடாசியோ மோன்சராட்டுக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேறு எந்த வழியும் இல்லை என்பதால், கட்சியிலிருந்து விலகியுள்ளேன். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். அவ்வாறு சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்பதற்காக, சம்பிரதாய முறையில்தான் கட்சியிலிருந்து விலகியுள்ளேன். பாஜகதான் எப்போதும் எனது இதயத்தில் உள்ளது.
கோவா மக்களுக்காகத்தான் இந்தக் கடினமாக முடிவை எடுத்துள்ளேன். எனது அரசியல் எதிா்காலம் குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். அதனை கோவா மக்கள் பாா்த்துக்கொள்வாா்கள்.
இந்தத் தோ்தலில் வேறு ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட பாஜக சாா்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், நான் மதிப்புகளுக்காகவே போட்டியிடுகிறேன். அதன் மீதே எனக்கு நம்பிக்கையுள்ளது. பனாஜி மக்கள் அதனை தீா்மானிக்கட்டும். இந்த விவகாரத்தில் எனது கட்சியுடன் உடன்பட முடியாது.
அதே நேரம், வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் நான் சேர மாட்டேன். பாஜக இல்லையெனில், சுயேச்சையாக மட்டும்தான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


