/

இவரா உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர்? பிரியங்கா சூசகம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் முதல்வர் வேட்பாளர் தானே என்று பிரியங்கா காந்தி வத்ரா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

News image

இவரா உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர்? பிரியங்கா சூசகம்

Updated On :21 ஜனவரி 2022, 11:09 am


புது தில்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் முதல்வர் வேட்பாளர் தானே என்று பிரியங்கா காந்தி வத்ரா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தானே நிறுத்தப்படவிருப்பதை பிரியங்கா காந்தி சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பிரியங்கா காந்தியிடம் கேட்கப்பட்டதற்கு, உத்தரப்பிரதேசத்தில், என்னைத் தவிர, வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் முகத்தை  யாராவது பார்க்கிறீர்களா? ஆனால் என் முகத்தை உத்தரப்பிரதேசத்தில் எங்குவேண்டுமானாலும் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.

பாஜக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் முறையே யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. 

முன்னதாக, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழுக் கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.