கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதத்துக்கும் மேல் செலவிட்ட மாநிலங்களில் பட்டியலில், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, தமிழகம், மேற்கு வங்க மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த மகாராஷ்டிர மாநிலமோ, மத்திய அரசு வழங்கிய கரோனா தடுப்பு நிதியை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநிலத்தில் சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு வழங்கிய கரோனா தடுப்பு நிதியில் 1 சதவீதத்துக்கும் குறைவான நிதியை மட்டுமே மகாராஷ்டிர மாநில அரசு பயன்படுத்தியுள்ளது.
கரோனா பேரிடர் கால பயன்பாட்டுக்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை இரண்டாம் தவணையாக ரூ.6,075 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகையில், இதுவரை ரூ.1,679 கோடி மட்டுமே அதாவது 27 சதவீத தொகையை மட்டுமே மாநிலங்கள் செலவிட்டுள்ளன.
இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்
இந்தத் தொகை முழுக்க முழுக்க கரோனா பரவல் தடுப்பு, கரோனா கண்டறிதல், கரோனா சிகிச்சையளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், மாநிலங்களின் சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒதுக்கப்படும் நிதியாகும்.
ராஜஸ்தான் மாநிலம் இதில் 5 சதவீத நிதியையும், உத்தரப் பிரதேசம் 9 சதவீத நிதியையும் பயன்படுத்தி, மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் நிற்கின்றன.
மக்கள் தொகையில் முன்னணியிலும், சுகாதார கட்டமைப்பின் பின்வரிசையிலும் இருக்கும் பிகார், இந்த நிதியில் வெறும் 18 சதவீதம் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. கேரளமும் கூட 20 சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தி ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், அது மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் இதுவரை வெறும் 26 சதவீதம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு மறுக்கப்பட்டு, 50 சதவீதம் வரை ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
மீதமிருக்கும் தொகை, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை பயன்படுத்திய மாநிலங்களுக்கு, அதன் தேவைக்கேற்ப ஒதுக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக நிதியைப் பயன்படுத்திய தில்லி, இதுவரை 138 சதவீத தொகையை செலவிட்டுள்ளது. கூடுதலாக தனது பட்ஜெட்டிலிருந்தும் அதிகமான தொகையை செலவிட்டு, சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் இதற்கு எதிர்மாறாக பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 2 சதவீதத்துக்கும் குறைவான தொகையைத்தான் பயன்படுத்தியுள்ளன. இதில் கோவா, சிக்கிம், அந்தமான் - நிக்கோபார் தீவுகளும் அடங்கும்.
ஒரு பக்கம் கரோனா பரவல், மறுபக்கம் சுகாதார நெருக்கடி போன்றவை மக்களின் வாழ்வாதாரங்களை முடக்கியிருக்கும் நிலையில், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, சுகாதார திட்டங்களுக்காக செலவிட்டு, சுகாதார உள்கட்டமைப்புகளை பலப்படுத்துவதே ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும் என்பதை உணர்ந்தேயாக வேண்டிய தருணம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


