தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உபி: நாயை விரட்டிய தாய் - மகள் மீது தாக்குதல்

எல்லைச் சுவரில் சிறுநீர் கழித்த நாயை விரட்ட முயன்ற பெண் மற்றும் அவரது மகளை நாயின் உரிமையாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2022, 9:59 am

ஹர்தோய் (உபி): எல்லைச் சுவரில் சிறுநீர் கழித்த நாயை விரட்ட முயன்ற பெண் மற்றும் அவரது மகளை நாயின் உரிமையாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.

பாதிக்கப்பட்ட பினா பாண்டே மற்றும் அவரது மகள் கௌஷிகி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவிற்குப் பிறகு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​தங்கள் பக்கத்து வீட்டுக்காரரான சஞ்சீவ் பாண்டேயின் நாய் தங்கள் எல்லைச் சுவரில் சிறுநீர் கழிப்பதைக் கண்டனர்.

இருவரும் நாயை விரட்ட முயன்றனர். இதனால் கோபமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து இருவரையும் கடுமையாகத் தாக்கினார்.

சஞ்சீவ் பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் பினா பாண்டே மற்றும் அவரது மகள் கௌஷிகி தலைமுடியைப் பிடித்து தரையில் வீசினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட பினா பாண்டே, சஞ்சீவ் பாண்டே மீது புகார் அளித்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ் பாண்டே குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.