தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவில் ஜூன் மாதத்தில் கரோனா நான்காம் அலை

நாட்டில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா நான்காம் அலை எழக்கூடும் என்று ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

இந்தியாவில் ஜூன் மாதத்தில் கரோனா நான்காம் அலை

Updated On :28 பிப்ரவரி 2022, 10:20 am


கான்பூர்: நாட்டில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா நான்காம் அலை எழக்கூடும் என்று ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், நாட்டில் ஜூன் மாத மத்தியில் கரோனா நான்காம் அலை எழக்கூடும் என்றும், அது தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நான்காம் அலையின் தீவிரம் எவ்வாறு இருக்கும் என்பது, புதிதாக உருமாற்றமடையும் கரோனா வைரஸை பொருத்தது என்றும், கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதைப் பொறுத்து தீவிரம் மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூரின் கணிதவியல் துறையினர் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள், மெட்ஆர்ஸிவ் இதழில் வெளியாகியுள்ளது. இதுவரை மறுமதிப்பீடு செய்யப்படவில்லை.

இந்த ஆய்வில், கரோனா முதல் அலை எழுந்து 936 நாள்களுக்குப் பின், நாட்டில் நான்காவது அலை எழக்கூடும் என்பதும், இது ஆகஸ்ட் மாதம் உச்சமடைந்து, அக்டோபர் மாதத்திலிருந்து குறையத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.