ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ருமேனியாவிலிருந்து 219 இந்தியர்களுடன் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம், 219 இந்தியர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

News image

219 இந்தியர்களுடன் புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

Updated On :26 பிப்ரவரி 2022, 1:02 pm

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம், 219 இந்தியர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒருகட்டமாக, மும்பைக்கு ருமேனியாவிலிருந்து முதல் விமானம் இன்று இரவு 8 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக இந்தியாவிலிருந்து இன்று காலை 3.40 மணியளவில் ருமேனியாவிற்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது.

அங்கு சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லையை வந்தடைந்த இந்தியர்கள், அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்ற ஏர் இந்திய விமானம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டை சென்றடைந்தது. அங்கு 219 இந்தியர்களுடன் ருமேனியாவிலிருந்து மும்பைக்கு முதல் விமானம் புறப்பட்டுவிட்டது.

இதனை உறுதி செய்திருக்கும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்க 24 மணி நேரமும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.