ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேதாராம் பகுதியில் நடைபெறும் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 'சம்மக்கா சரக்கா ஜாத்ரா' விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.
பழங்காலத்தில், போக்குவரத்து வசதி இல்லாத போது, அண்மையில் இருப்பவர்களும், தொலைதூரத்தில் இருப்பவர்களும், அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக, நடந்தே வந்து இந்த விழாவில் பங்கேற்பார்கள். ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் வருவார்கள்.
இதையும் படிக்க.. சிறுத்தைக்கு நேர்ந்த சோகம்: 2 நாள்கள், 30 பேர், இறுதியில் வெற்றி
ஒரு வார காலம் நடைபெறும் இந்த ஜாத்ரா விழாவுக்கு வரும் பக்தர்கள், அடர்ந்த வனப்பகுதிக்குள் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கியிருப்பார்கள். தெலங்கானாவில் நடைபெறும் இவ்விழாவிற்கு, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கம்மம், பத்ராசலம் மற்றும் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் கோதாவரியின் இரு கரைகளையும் தொட்டவாறு வந்தவண்ணம் இருப்பார்கள்.
ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மாட்டுவண்டிகளில் வந்தவர்கள் பலரும் தற்போது ஹெலிகாப்டரில் வந்திறங்கும் காலமாகிவிட்டது. மேதாரத்துக்கு 2010ஆம் ஆண்டு முதல் வாராங்கலில் உள்ள மம்நூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கியது. ஆனால், அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது பல புதிய வசதிகளுடன் இந்த சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
சுமார் 1.25 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஜாத்ரா, இன்று தொடங்கியிருக்கிறது. தெலங்கானாவில் இயக்கப்படும் 4 ஆயிரம் பேருந்துகள் மூலம் சுமார் 30 லட்சம் பேர் வருவார்கள் என்றும், 3.5 லட்சம் பேர் தனியார் வாகனங்கள் மூலம் வருவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தேவையான ஏற்பாடுகள் செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தெலங்கானாவின் கும்ப மேளா என்றழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


