கோழிக்கோடு: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விபத்து குறித்து கூறுகையில், ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஓட்டுநர், தூக்க கலக்கத்தில் இருந்ததால், வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வாகனங்கள் வரும் சாலையின் குறுக்கே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 30 வயதுடைய இரண்டு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 5 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் சபரிமலைக்கு வரும் போது இந்த விபத்து நேரிட்டதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


