உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காணாமல் போன தலித் பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதாக, உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.
அவரது கழுத்து எழும்பு உடைக்கப்பட்டிருப்பதாக, உடற்கூராய்வில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் காணாமல் போன நிலையில், அவரது அழுகிய உடல் வியாழக்கிழமை, காலை கண்டெடுக்கப்பட்டது.
பலியான பெண்ணின் தாய், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பதேஷ் பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்குக்கு இந்த கொலையின் பின்னணியில் இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில்தான், பலியான பெண்ணின் உடல், ஒரு போர்வையில் சுற்றப்பட்டு, கழிவுநீர் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உன்னாவ் பகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்ப காணாமல் போனார். அவரைக் காணவில்லை என்று அவரதுதாய் டிசம்பர் 8ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், அது குறித்து காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனவரி 24ஆம் தேதி தனது மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கார் முன்பு விழுந்து தாய் தற்கொலைக்கு முயன்றார். அதன்பிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதன்பிறகுதான், ரஜோல் சிங் கைது செய்யப்பட்டார். எனினும், பெண்ணின் உடலை காவலர்கள் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


