/

உத்தரப்பிரதேச தேர்தல்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த மணமகன்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இன்று திருமணம் நடைபெம் மணமகன் ஒருவர், மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

News image

உத்தரப்பிரதேச தேர்தல்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த மணமகன்

Updated On :10 பிப்ரவரி 2022, 12:38 pm


முசாஃபர்நகர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இன்று திருமணம் நடைபெம் மணமகன் ஒருவர், மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் எல்லாமே என்று வாக்குச்சாவடியில் அவரை புகைப்படம் எடுத்த செய்தியாளர்களிடம் கூறினார் அங்குர் பல்யான் என்ற அந்த மணமகன்.

நான் மணமகளிடமும், வாக்களித்துவிட்டு திருமணத்துக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு,  58 தொகுதிகளில், முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.