புது தில்லி: ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்துகிறார் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரண் ரிஜிஜு பேசியுள்ளார்.
இதையும் படிக்க.. நீதிபதியான முதல் திருநங்கை அரசிடம் கேட்பது ஒன்றுதான்!.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டது. 20 வீரா்களைக் கொன்றுள்ளது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீனப் படையினரால் நமது வீரா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
இதையும் படிக்க.. அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை: குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்
எல்லையில் சீனா மேற்கொள்வது ஆக்கிரமிப்பு முயற்சில்ல. அது போருக்கான் முன்னேற்பாடு. அவா்கள் அங்கு குவிக்கும் ஆயுதங்களைப் பாா்த்தால், அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஜிஜு டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்தை மட்டும் ராகுல் காந்தி அவமதிக்கவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்துள்ளார். அதே வேளையில், இந்திய ராணுவத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கடகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மிதுனம்

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


