தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

2021 லூதியாணா நீதிமன்ற குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது

2021ஆம்ஆண்டு லூதியாணா நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

லூதியாணா காவல்துறை

Updated On :2 டிசம்பர் 2022, 3:16 am


புது தில்லி: 2021ஆம்ஆண்டு லூதியாணா நீதிமன்றத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை வெள்ளியன்று உறுதி செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோலாலம்பூரிலிருந்து இந்தியா திரும்பியபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லூதியாணாவில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார், ஆறு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.