பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மணிப்பூர் முதல்வருடன் காலை விருந்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மணிப்பூர் முதல்வர் என்.பீரேன் சிங்கை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து, காலை விருந்தில் பங்கேற்றார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:43 am

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மணிப்பூர் முதல்வர் என்.பீரேன் சிங்கை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து, காலை விருந்தில் பங்கேற்றார். 

முதல்வரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இந்திய ராணுவத் தலைவர் மானோஜ் பாண்டே, மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாரதா தேவி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் வெளியிட்டு டிவிட்டர் பதிவில், 

மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத்சிங் ஜி இன்று எனது இல்லத்தில் இருப்பதும், மாநிலத்தின் பல்வேறு முக்கிய விஷயங்களில் அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

அமைச்சர்கள், எம்.எல்.ஏ., சி.ஓ.ஏ.எஸ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் ராஜ்நாத்சிங் ஜிக்கு எனது இல்லத்தில் காலை உணவு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

அவரது தொடர்ச்சியான ஆதரவிற்கு மிகவும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

வடகிழக்கு மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக ராஜ்நாத் சிங் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.