வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் என்று அரசியலமைப்பு நடத்தைக் குழு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் உருவாகியுள்ள வெறுப்பு அரசியல் குறித்து 8 முன்னாள் நீதிபதிகள், 97 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 92 முன்னாள் ராணுவ வீரர்கள் கையெழுத்திட்டு அரசியலமைப்பு நடத்தைக் குழு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடிதத்தில் கையெழுத்திட்டிருப்போர் தங்களை, 'அக்கறையுள்ள குடிமக்கள்' என்று குறிப்பிட்டிருப்பதோடு, இந்தக் கடிதத்தின் பின்னணியில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த ஒரு வெறித்தனத்தை நாங்கள் காண்கிறோம். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டதுபோல உள்ளது.
இந்த சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் மௌனம், காதுகோளாதது போல் உள்ளது என்றும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறை கடந்த சில ஆண்டுகளாகவும் மாதங்களாகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தில்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீவ் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்ஷங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் உள்ளிட்ட 108 பேர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முன்னாள் அரசு ஊழியர்களான தாங்கள், வழக்கமான இதுபோன்ற கடினமான வார்த்தை உபயோகங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் தனித்துவம் மிக வேகமாக சிதைக்கப்படுவதே, எங்களது கோபம் மற்றும் வேதனையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


