புது தில்லி: நாட்டில் கரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. நாள்தோறும் 15 முதல் 16 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் பூஷண், பண்டிகை நாள்கள் நெருங்குகின்றன. மக்கள், கூட்டம் கூடுவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் மக்களை மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொள்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி பண்டிகைககளைக் கொண்டாடுங்கள் என்றும் கூறினார்.
மேலும், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் கேரளத்தில் மட்டும் 52 சதவீதம் பேர் அதாவது 1,44,000 பேர் உள்ளனர். மகாராஷ்டிரத்தில் 40 ஆயிரம் கரோனா நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் இது 17 ஆயிரமாக உள்ளது. மிசோரத்தில் 16,800 ஆகவும், கர்நாடகத்தில் 12,000 ஆகவும், ஆந்திரத்தில் 11,000 ஆகவும் உள்ளது.
டெங்கு நோய்க்கு எதிராக தடுப்பூசி பரிசோதிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவெடுத்திருப்பதகாவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


