மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்

ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்

Updated On :29 செப்டம்பர் 2021, 9:52 am


சண்டிகர்: ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தை மரணமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தலைவர் நரேஷ், மற்றவர்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்களது வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் மற்றும் உறவினரின் குழந்தை உள்பட நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


நரேஷ், நான்கு பேருக்கும் விஷம் அல்லது தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பிறகு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் தெரியவரவில்லை. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாக நரேஷின் தந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.