புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில், கள்ள நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருந்திருப்பதாக ஒரு அதிர்ச்சிதரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத வகையில், ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதேயில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்துள்ளது. அதாவது, 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ.92.17 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல், தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுவே இந்த அளவுக்கு அதிர்ச்சி அளிக்கிறதென்றால், மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் அடுத்தது காத்திருக்கிறது. அதுதான். மகாராஷ்டிரத்தைப் பற்றியது. அதாவது, ஒரு ஆண்டு முழுக்க கைப்பற்றப்பட்ட 92 கோடி கள்ள நோட்டில், மகாராஷ்டிரத்தில் இருந்து மட்டும் 83.61 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். இந்த நோட்டுகளின் எண்ணிக்கை 6,99,495 ஆகும்.
அதாவது ஒட்டுமொத்த நாட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டில் 90 சதவீதம் ஒரே மாநிலத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். அதற்கடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (2.46 கோடி), ஆந்திரம் 1.4 கோடியுடன் மூன்றாவது இடத்திலும், தமிழகம் 1 கோடி கள்ள நோட்டுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
கள்ள நோட்டுகளை எல்லாம் ஒழிப்பதற்காக என்று, 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழக்கம் செய்த நடவடிக்கைக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில் இவ்வாறு 92.17 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சம் தொட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு விமரிசனங்களையும் உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


