புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு வந்துள்ளார். அவர் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யவிருக்கிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜம்மு வந்துள்ள ராகுல், மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லுவதற்கான, கத்ரா முகாமை வந்தடைந்ததாக கட்சியினத் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து அவர் கட்சியினருடன் இணைந்து நடைப்பயணமாகவே கோயிலுக்குச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஜம்முவில் இரவு தங்கும் ராகுல், செப்டம்பர் 10ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு, உள்ளூர் தலைவர்களுடன் கலந்துரையாடும் ராகுல், பிறகு மாலையில் தில்லி திரும்பவிருக்கிறார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ராகுல் ஜம்முவுக்குச் செல்வது இது இரண்டாது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த ராகுல், ஸ்ரீநகரில் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது கீர் பவானி கோயில் மற்றும் ஹஸ்ரத் தர்கா ஷரீப்ஃபுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


