மங்களூரு: நியூசிலாந்தில் வாழ்ந்து வந்த மங்களூருவைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகனால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்து 5 நாள்களுக்குப் பிறகே வெளிவுலகுக்குத் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், தன்னையும் கடுமையாகத் தாக்கிக் கொண்ட மகன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்லாந்தில் வசித்து வந்த எலிசபெத் 'எல்ஸி' பங்கேரா (55) மற்றும் அவரது கணவர் ஹெர்மன் பங்கேரா (60) ஆகியோர் தங்களது மகனால் படுபயங்கரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் செவ்வாயன்றுதான் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிய வந்துள்ளது. அவர்களது அண்டைவீட்டைச் சேர்ந்த குப்தா என்பவர் கூறுகையில், அவர்களதுமகன் ஷீல் (23) பொறியியல் பட்டப்படிப்பு முடித்தநிலையில், குடும்பத்திலிருந்து வெளியேறி தனியாக வசிக்க முடிவு செய்ததால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
இதனால் பெற்றோர் மற்றும் மகனுக்கு இடையே தகராறு நீடித்து வந்ததாகவும், சில நாள்களுக்கு முன்பு இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நேரிட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த ஷீல், கத்தியால் பெற்றோரை கடுமையாகத் தாக்கிக் கொன்றுவிட்டு, தன்னையும் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகக் கூறுகிறார் குப்தா.
ஹெர்மன் மற்றும் எல்ஸியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலையில் நடந்து முடிந்தன. ஹெர்மன் மும்பையில் உள்ள பள்ளியின் நிர்வாகியாகவும், எல்ஸி தனியார் நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பிலும் இருந்துள்ளார். இருவரும் திருமணம் முடிந்து ஷீல் பிறந்ததும், தங்களது மகனுக்கு சிறந்த கல்வி மற்றும் நல்ல எதிர்காலத்தை உருவாக்க கடந்த 2006ஆம் ஆண்டு மூவரும் நியூசிலாந்து செல்ல முடிவு செய்தனர். மகன் ஷீல்லும் படிப்பில் சிறந்து விளங்கினான். நியூசிலாந்தில் ஹெர்மன் மருத்துவத் துறை நிறுவனத்திலும், எல்ஸி ஆக்லாந்து பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


