புது தில்லி: இந்தியாவில் பரவியிருக்கும் கரோனா தொற்றின் மரபணு அறியும் பரிசோதனை திட்டம், தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சார்ஸ் சிஓவி 2 உருமாறிய டெல்டா வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
அதிவிரைவாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸை விடவும், இந்த புதிய வகை வைரஸ் மிக அதிகவிரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாக அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. ரூ.3 கோடி வருமான வரி செலுத்த உ.பி. ரிக்ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ்
இந்த புதிய வகை கரோனா வைரஸ் ஏஒய்.4.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை, இந்தியாவில் கரோனா பாதித்த 68 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கரோனா மரபணு பரிசோதனையில், இதுவரை யாருக்கும் இந்த புதிய தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறுகையில், எப்படியாகினும், கரோனா தொற்றுப் பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம், அடுத்து வரும் நாள்களில், வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிகமான மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்படும். எனவே, ஏஒய் 4.2 வகை புதிய கரோனா பரவுவதை முன்கூட்டியே கண்டறிய முடியும். கரோன பாதித்திருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார்.
பிரிட்டன் சுகாதாரத் துறையின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், பிரிட்டனில், டெல்டா வகை வைரஸின் புதிய வகை ஒன்று நாட்டில் தற்போது பரவி வருகிறது. கரோனா அதிகம் பாதிக்கும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரிட்டனில் தற்போது நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்த புதிய வகை கரோனா தற்போது மிக அதிகமாகப் பரவி வருகறிது. டெல்டா வகை கரோனா வைரஸைக் காட்டிலும், இந்த புதிய வகை கரோனா 10 சதவீதம் மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும், இது தற்போது அமெரிக்காவிலும் பரவி வரவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டிருப்பதோடு, இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அல்லது வீரமியமிக்க தொற்றாகவோ இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


