பாட்னா: பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் ஏடிஎம்- இயந்திரத்தில் வைக்கக் கொண்டு வரப்பட்ட பணம் இருந்த வேன் கடத்தப்பட்ட சம்பவத்தில், கொள்ளையனின் தாயும் சகோதரியும் தற்கொலை செய்து கொண்டனர்.
சோனு என்ற இளைஞர், பிகார் மாநிலம் சரன் பகுதியில் ஏடிஎம் பணம் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரைத் தேடி காவல்துறையினர் வீட்டுக்கு வருவதை அறிந்த அவர் தப்பியோடிவிட்டார். வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் சுமார் 60.5 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.
இதையும் படிக்கலாமே.. பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில்தான், சோனுவின் தாய் மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது.
மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதிய நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தனது சகோதரன் பற்றி அக்கம்பக்கத்தாரின் பேச்சுகளால் அவமானம் அடைந்து, அவமரியாதையோடு வாழ விரும்பவில்லை. அவர்கள் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்கள். அதனால்தான் இந்த துயர முடிவை எடுக்கிறோம். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை தயவுகூர்ந்து காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். எனது தந்தையால், மகனை கட்டுப்படுத்த முடியவில்லை. மகன் செய்த தவறுக்கு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மகனை சரியாக வளர்க்காததுதான் அவர் செய்த குற்றம் என்று எழுதியுள்ளார்.
விசாரணையில், சோனுவுக்கு பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையது தெரிய வந்துள்ளது. அவனது கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


