பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரின் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரிச் சோதனை

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

News image

எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரின் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரிச் சோதனை

Updated On :7 அக்டோபர் 2021, 9:24 am


பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகத்தின் பகல்கோட் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூருவிலும் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

ஏராளமான தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறையில் இருந்து வரி மோசடி குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பல நீர்பாசனத் துறை திட்டங்களின் போது முறைகேடுகள் செய்யப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.