பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை நீட்டிப்பு 

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 21-ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

News image

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை நீட்டிப்பு 

Updated On :25 மே 2021, 6:19 am

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 21-ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

ஜூன் 7 வரை கட்டுப்பாடுகள் தொடரும். ஆனால் மே 25, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் தங்கள் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வாகனங்களில் பயணம் செய்ய யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் பொருள்களை விரைந்து வாங்கிக்கொண்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேசமயம் மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.