ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில் முதல் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் நீரிழிவு நோயாளிகளை தாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நுண்ணுயிரியல் துறையின் தலைவர் சாஷி சோடன் தெரிவித்தார்.
இதுவே ஜம்மு-காஷ்மீரில் பாதித்த முதல் வழக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவு (900 மி.கி / டி.எல்) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், தினசரி இறப்புகளின் எண்ணிக்கை அதிகாரிகளுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


