நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்
நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.


லக்னௌ: நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் கூட இந்த மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவத்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நாட்டு மக்களிடையே கொண்டு சேர்த்ததில், வங்கிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வகிப்பதாக உத்தரப்பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 - 21-ஆம் நிதியாண்டில், கடந்த டிசம்பர் 2020 வரையில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.286 கோடிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும், இதே காலக்கட்டத்தில் 2019 - 20ஆம் நிதியாண்டில் இது ரூ.151 கோடியாக இருந்ததாகவும், இது 112 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகர் மற்றும் ஃபிரோஸாபாத் மாவட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்தமைக்காக பெருமையோடு டிஜிட்டல் மாவட்டங்கள் என்று அழைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...