மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த ஆய்வு அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை தாக்கல் செய்தது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், வன்முறையில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவாகியுள்ள அனைத்து வழக்குளையும் ஆய்வு செய்ய குழு ஒன்றை என்ஹெச்ஆா்சி அமைக்க வேண்டும். இந்த குழு பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்து, அதுதொடா்பான விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ராஜிவ் ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர், கூச் பிஹார் உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் முன்பு இன்று தாக்கல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


