/

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்: பண மோசடி செய்த ஐவர் கைது

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்: பண மோசடி செய்த ஐவர் கைது

Updated On :22 ஜூன் 2021, 3:11 am


நொய்டா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். நொய்டா சைபர் காவல்துறையினரும், லக்னௌ சைபர் கிரைம் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல்வேட்டையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கி, அதில், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு, கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர். இப்படி, ராமர் கோயிலுக்கு நன்கொடை அனுப்ப விரும்பிய மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை இவர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் மூன்று பேர் அமேதியைச் சேர்ந்தவர்கள், 2 பர் பிகாரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கூட்டு சேர்ந்து கிழக்கு தில்லியின் புதிய அஷோக் நகரில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.