மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதிய சாதனை படைத்து முதல் மாநிலமானது பிகார்

ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பிகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.

News image

கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?

Updated On :18 ஜூன் 2021, 5:57 am


பாட்னா: நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக விளங்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பிகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.

பிகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னின்று நடத்தி வரும் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யய் அம்ரித் இதனை உறுதி செய்துள்ளார்.

மாநில முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களின் அறிவுறுத்தல்படி, மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 6,62,507 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜூலை மாதம் முதல் அடுத்த 6 மாதத்துக்குள் மாநிலத்தில் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.