ரஹ்மானும், அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணான சஜிதாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு தங்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதி, சஜிதா வீட்டை விட்டு வெளியேறி ரஹ்மான் வீட்டுக்கு வந்துள்ளார். அன்று முதல், அவர் அந்த அறையிலேயே வாழ்ந்து வந்துள்ளார். மகளைக் காணாமல் தேடிய சஜிதாவின் பெற்றோர், காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்குக் கூட, தங்களது மகள் பக்கத்து வீட்டில் ஒரு அறையில்தான் இருக்கிறார் என்பது குறித்த எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் வெளியிலேயே தேடியுள்ளனர்.