புது தில்லி: நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 11 சதவீதம் இந்தியாவில் நடப்பவை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள், ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நாட்டில் நிகழும் சாலை விபத்துகள் தற்போது கவலைதரும் வகையில் உள்ளன.
உலகில் உள்ள மொத்த வாகனங்களில் வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்களே இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், உலகளவில் நடைபெறும் மொத்த சாலை விபத்துகளில் இந்தியாவில்தான் 11 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. 1.5 லட்சம் பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். இது ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


