புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கர்நாடக முதல்வர் யார்? எம்.எல்.ஏ.க்களுடன் மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரை நியமிப்பது குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை மத்திய அமைச்சர்கள் இன்று கேட்கவுள்ளனர்.

News image

எம்.எல்.ஏ.க்களுடன் மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை

Updated On :27 ஜூலை 2021, 6:53 am

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரை நியமிப்பது குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோர் இன்று கேட்கவுள்ளனர்.

கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷான் ரெட்டி ஆகியோர் கர்நாடகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து புதிய முதல்வர்கள் குறித்த அவர்களது கருத்துகளை கேட்கவுள்ளனர். அதன்பிறகு தேசிய தலைமையுடன் ஆலோசித்து ஓரிரு நாள்களில் புதிய முதல்வர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு கர்நாடக முதல்வராக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், நேற்று ராஜிநாமா செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.