பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சித்துவை நியமனம் செய்தது பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு உடன்பாடு இல்லாத நிலையில், நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என தேசிய பொதுச் செயலாளர் ஹரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹரீஸ் ராவத் கூறியதாவது, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவை வரவேற்கவுள்ளோம். இந்த நிகழ்வில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்தார்.
பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்கட்சிக்குள் உள்கட்சிப்பூசல் வலுத்து வருகிறது. மாநில முதல்வரும் கட்சியின் மூத்த தலைவா்களுள் ஒருவருமான அமரீந்தா் சிங்குக்கு சவால் விடும் வகையில் நவ்ஜோத் சிங் சித்து செயல்பட்டு வருகிறாா். பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரா் சித்து, மாநில அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா். எனினும் முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் அவா் பதவி விலகினாா்.
இதையடுத்து கட்சியில் முக்கிய பதவி வேண்டும் என சித்து கூறிய நிலையில் மாநில தலைவராக நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. சித்துவை தலைவராக நியமனம் செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தேசிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தலைமையின் முடிவை ஏற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


