சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பூனையல்ல.. புலி: நல்ல பாம்பு முன் கம்பீரமாக நின்று உரிமையாளரைக் காத்த செல்லப்பிராணி

ஒடிசா மாநிலம் புவேனஸ்வரத்தில், வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை தடுத்து நிறுத்தி, உரிமையாளரின் குடும்பத்தினரைக் காத்துள்ளது செல்லப் பிராணியான பூனை.

News image
பூனையல்ல.. புலி: நல்ல பாம்பு முன் கம்பீரமாக நின்று உரிமையாளரைக் காத்த செல்லப்பிராணி
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

DIN


புவனேஸ்வரம்: பூனையும், நாயும் மனிதர்களின் நண்பர்கள் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவேனஸ்வரத்தில், வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை தடுத்து நிறுத்தி, உரிமையாளரின் குடும்பத்தினரைக் காத்துள்ளது செல்லப் பிராணியான பூனை.

பீமாதாங்கி என்ற பகுதியில் வசித்து வரும் சம்பத் குமார், ஒரு பூனையை வளர்த்து வருகிறார். அதன் பெயர் சின்னு. அங்கும் இங்கும் வாலையாட்டிக் கொண்டு சுற்றித் திரியும் அந்த பூனை, திடீரென, தனது வீட்டின் பின்புறம் பாய்ந்தோடியது.

இதைப் பார்த்த சம்பத், பூனை இப்படி வேகமாக ஓடுவது ஏனென்று அறிய அதனைப் பின்தொடர்ந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரது நெஞ்சைப் பிளக்கச் செய்வதாக இருந்தது. சுமார் நான்கு அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் சம்பத் அதிர்ச்சியில் உறைய, அந்த குட்டிப் பூனையோ, நல்ல பாம்பின் பாதையை வழிமறித்து, கம்பீரமாக நின்று கொண்டது. அந்த பாம்பால், பூனையை எதிர்த்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. கடிக்கப் போவதாக பாம்பு மிரட்டினாலும், ஒரு அடி கூட பூனை பின்வாங்கவில்லை.  இந்தப் போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

இதைப் பார்த்த சம்பத் உடனடியாக பாம்புகள் மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டார். சமூக ஆர்வலரான அருண் குமார் உடனடியாக வந்து, பூனையை பத்திரமாக வீட்டுக்குள் அனுப்பி விட்டு, வீட்டுக்குள் நுழையக் காத்திருந்த நல்ல பாம்பை பிடித்துவிட்டார். 

நான் வரும் வரை அந்த நல்ல பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் அரணாக நின்று காத்திருக்கிறது அந்தப் பூனை. இப்படியே அது 30 நிமிடங்கள் நல்ல பாம்பை எதிர்கொண்டு ஒரு போராளி போல நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார் அருண்.

அதேவேளையில், பூனையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து, பூனைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். 

கடந்த 2019ஆம் ஆண்டு இதுபோல குர்தா மாவட்டத்தில், வீட்டுக்குள் நுழைய முயன்ற விஷ நாகத்திடம் கடிபட்டு, தனது உரிமையாளர்களுக்காக உயிரை விட்டது நினைவிருக்கலாம். 

பொதுவாக ஒரு நல்ல பாம்பு பூனையைக் கடித்துக் கொல்லும் திறன் பெற்றதுதான். ஆனால், பூனையின் அந்த தீரம்தான் நல்ல பாம்பை கொத்த விடாமல் செய்திருக்கிறது என்கிறார் பாம்புகள் உதவி மையத்தின் பொதுச் செயலாளர் மாலிக்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.