வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குற்றவாளிகளா என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதனால், தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்ததையடுத்து ஜந்தர் மந்தர் நோக்கி விவசாயிகள் சென்று கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு குடியரசுத் தினத்தன்று நடைபெற்றது போல கலவரம் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜேஷ் திகைத்,
நாங்கள் கலவரம் செய்பவர்களா அல்லது குற்றவாளிகளா. நாடாளுமன்றத்திற்கு 150 மீட்டர் தொலைவில் தான் ஜந்தர் மந்தர் உள்ளது. ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


