புது தில்லி: இடைவேளைக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழை விரைவில் தீவிரமடையும், பருவமழை தொடங்காத தில்லி உள்பட மற்ற வட இந்திய மாநிலங்களிலும் ஜூலை 10ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில், தென்மேற்குப் பருவமழை நாட்டில் மெல்ல தீவிரமடையும். ஜூலை 8 முதல் மேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் இணைந்த கிழக்கு மத்திய இந்தியப் பகுதிகளிலும் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு - மத்திய மற்றும் அதனுடன் இணைந்த வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவின் கடற்கரையை ஒட்டி ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகும். இதன் மூலம், வங்கக் கடல் பகுதியிலிருந்து கிழக்கு திசைக் காற்றின் ஈரப்பதம் மெல்ல கிழக்கு இந்திய மாநிலங்களில் ஜூலை 8 முதல் பரவும்.
இது மேலும் ஜூலை 10 முதல் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 10 முதல் நாட்டில் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


