கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 52 வயது செவிலியர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே மாரடைப்பால் மரணமடைந்தார்.
செவிலியர் சுஜாவுக்கு கடுமையான நீரிழிவு பிரச்னை இருந்ததாகவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அங்கு சிறிது நேரம் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடற்கூராய்வுக்குப் பிறகே, மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரும். ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அவரது இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

