குடிநீர் பாட்டிலை 10 ரூபாய் கூடுதலாக விற்ற உணவகத்துக்கு ரூ.25,000 அபராதம்
முன்னணி உணவகத்துக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை, அதன் விலையுடன் ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஹைதராபாத்: முன்னணி உணவகத்துக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை, அதன் விலையுடன் ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், உணவகம் ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை 12 சதவீத வட்டியுடன் நுகர்வோருக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தில்குஷ்நகரைச் சேர்ந்த மொகம்மது மொஹ்சின் (32), நுகர்வோர் தீர்ப்பாயத்தில் அளித்த புகாரில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னணியில் இருக்கும் உணவகம் ஒன்று, ரூ.20 மதிப்புள்ள குடிநீர் பாட்டிலை 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.20 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், அடுத்த 45 நாள்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...