நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்
நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்றுகிறார்.


நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்றுகிறார்.
குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் இந்தி மற்றும் ஆங்கில உரையைத்தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாக உள்ளது.
இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் குடியரசுத் தலைவரின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...