பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் கொடூரம்: குடும்பத்தினரால் இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

Woman burnt alive by family in Uttar Pradesh for having Muslim lover

Updated On :15 பிப்ரவரி 2021, 12:43 pm

உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தங்காட்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜிகினா கிராமத்தில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமிரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன், சடலம் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா யாதவ் என்ற இளம்பெண் என்று அடையாளம் காணப்பட்டது. 

இதையடுதது, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,

கோரக்பூரில்  இளம்பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துள்ளார். குடும்பத்தினர் அவனை விட்டு விலகும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதை அப்பெண் மறுத்த காரணத்தால், குடும்பத்தினருடன் சேர்ந்து பெண்ணை கொல்ல முயன்றுள்ளனர். இதற்காகக் கூலிப் படையையும் நியமித்துள்ளனர்.

பிப்.3-ம் தேதி அப்பெண்ணை ஜிகினா கிராமத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, வாய் மற்றும் கைகளைக் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது மகளுக்கு ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவனை விட்டுவிலக மறுத்ததால், அவளைக் கொல்ல குடும்பத்தோடு முடிவு செய்ததாகப் பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் தந்தை, சகோதரர், மைத்துனர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கபிர் நகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.