காதலர் தினம்: பெங்களூருவிலிருந்து 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி!
காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகம் முழுவதுமுள்ள 41 இடங்களுக்கு 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகம் முழுவதுமுள்ள 41 இடங்களுக்கு 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் சர்வதேச அளவில் 1.73 லட்சம் கிலோ மற்றும் உள்நாட்டில் 1.03 லட்சம் கிலோ எடையுள்ள 90 லட்சம் ரோஜா செண்டுகள் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ளன.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
எண்ணிக்கையைப் பொறுத்தவரை சர்வதேச நாடுகளுக்கு 64 லட்சம் ரோஜா பூச்செண்டுகள் விமானத்தில் பறந்துள்ளன. சிங்கப்பூர், லண்டன், கோலாலம்பூர், பெய்ரூட், மணிலா மற்றும் ஆக்லாந்து போன்ற நகரங்கள் இதில் அடங்கும்.
அதேபோன்று கொல்கத்தா, தில்லி, , சண்டிகர், மும்பை, ஜெய்ப்பூர், சென்னை, ஆமதாபாத் ஆகிய உள்நாட்டு நகரங்களுக்கு 26 லட்சம் ரோஜா செண்டுகள் அனுப்பப்பட்டுளள,
2018 ஆம் ஆண்டில், இந்த விமான நிலையத்தில் இருந்து 52 லட்சம் ரோஜா பூச்செண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...