லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் பஞ்சாப் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.
லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கிய பஞ்சாப் டிஜிபி, நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பில் பலியானவர், முன்னாள் காவலர் ககன்தீப் சிங். அவர்தான் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டை எடுத்து வந்துள்ளார். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் 2019ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடா்பாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அப்போது நீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்த இரு பெண்கள் உள்பட 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
குண்டுவெடிப்பால் நீதிமன்ற வளாகச் சுவா் சேதமடைந்தது; அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளும், வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. சில ஜன்னல்களின் இரும்பு கிரில்களும் பெயா்ந்து தூர வீசப்பட்டன. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.
கவலையளிக்கும் விவகாரம்:
குண்டுவெடிப்பு குறித்து பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜாவிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டறிந்தாா். அதையடுத்து, நாடுமுழுவதும் நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகத் தெரிவித்த அவா், இதுபோன்ற தொடா்ச்சியான சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறினாா்.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு
லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஜி) குழு ஒன்று தடயவியல் ஆய்வை நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


