மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மத்திய அமைச்சரின் அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த அழைப

News image

12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மத்திய அமைச்சரின் அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சிகள்

Updated On :20 டிசம்பர் 2021, 12:45 pm

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்த சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இன்று காலை நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான நேரங்களில் அமளி காரணமாக கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் சார்ந்த 4 கட்சிகளின் தலைவர்களுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களின் காங்கிரஸ், திரிணமூல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று காலை 10 மணிக்குக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே, ஒத்த சிந்தனையுடைய கட்சிகளின் அவைத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் காலை 9.45 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

பிரகலாத் ஜோஷி அழைப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகப் போராடினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கூட்டத்துக்கு அழைக்காமல் 4 எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் கூட்டத்துக்கு அழைத்திருப்பது துரதிருஷ்டவசமானது, நியாயமற்றது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.