டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஷீனா போரா காஷ்மீரில் உயிரோடு இருக்கிறார்: இந்திராணி முகர்ஜி கடிதம்

ஷீனா போரா காஷ்மீரில் உயிரோடு இருப்பதாக, இந்திராணி முகர்ஜி, சிபிஐக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News image
ஷீனா போரா காஷ்மீரில் உயிரோடு இருக்கிறார்: இந்திராணி முகர்ஜி கடிதம்
Updated On :28 ஜனவரி 2024, 5:42 am

ENS


ஷீனா போரா காஷ்மீரில் உயிரோடு இருப்பதாக, இந்திராணி முகர்ஜி, சிபிஐக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா  பாராவை கொலை செய்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பீட்டர் முகர்ஜிக்கும், அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை, ஷீனா போரா காதலித்ததால், இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜி, சிபிஐக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், பைகுல்லா சிறையில் பணியாற்றும் சிறைத்துறை அதிகாரி ஒருவர், தான் ஸ்ரீநகருக்கு சுற்றுலா சென்ற போது, அங்கு ஷீனா போராவை பார்த்ததாக தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தனது மகள் ஷீனா போரா, காஷ்மீரில் இருக்கிறாரா என்று தேடிப் பார்க்குமாறு சிபிஐயை இந்திராணி முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்துக் கூற சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.