ஆந்திரம்: 2 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி மண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


கிருஷ்ணா: ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டம் மடினேபள்ளி மண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்விரு பள்ளிகளுக்கும் இரண்டு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்கள் யாருக்கேனும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...