மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று முதியோர் இல்லத்தில் மதிய உணவை அருந்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அதன்பிறகு, மலப்புரம் மாவட்டம் காந்தி பவன் முதியோர் இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார்.

முன்னதாக நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்த பின்னர் மானந்தவாடியில் சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - துலாம்

குழப்பம் நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (25 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கன்னி ராசிக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


