கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக கரோனா கோரத்தாண்டவம் எடுத்துள்ளது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இரவு ஊரடங்கு மட்டுமின்றி, 2 நாள் வார பொது முடக்கமும் தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் கேரளத்தில் ஊரடங்கு தொடங்கியுள்ளது. மக்கள் சரியான காரணம் இல்லாமல் தெருக்களில் வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது.
அதேபோல் அத்தியாவசியப் பொருள்களுக்கு மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தனியார் வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,30,617 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28,447 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் இதுவரை 1,78,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


