ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

குஜராத் இடைத்தேர்தல்: 18% வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 18 சதவீத வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 அக்டோபர் 2020, 9:26 am

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் 18 சதவீத வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

ஏடிஆர் அறிக்கையின்படி, 80 வேட்பாளர்களில் 14 பேரின் வாக்கெடுப்பு பிரமாணப் பத்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு குற்றவியல் வழக்குகளை அறிவித்துள்ளனர், அவர்களில் ஏழு பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

கட்சி வாரியாக, பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவின் 8 வேட்பாளர்களில் 3 பேர், காங்கிரசின் 8 வேட்பாளர்களில் 2 பேர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 8 பேர் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்பவர்களில் பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், பாஜகவைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களில் இருவர், 53 சுயேச்சை வேட்பாளர்களில் 4 பேர் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து அப்தாசா, லிம்ப்டி, மோர்பி, தாரி, கடதா, கர்ஜன், டாங் மற்றும் கப்ராடா ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.