டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தெலங்கானாவில் மேலும் 1,983 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Telangana records 1,983 new COVID-19 cases, ten fatalities in past 24 hrs
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

UNI

தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,983 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,02,594 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரேநாளில், பத்து பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,181 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 50,598 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டுமொத்தமாக, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32,92,195 ஆகும். 

மேலும் ஒரேநாளில் 2,381 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 1,74,769 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மீட்பு விகிதம் 86.26 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 26,644 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.