இந்தியாவில் ஒரு லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி எண்ணிக்கை
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.


இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,069 பேர் உயிரிழந்ததை அடுத்து, கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,00,875 பலியாகியுள்ளனர். இதையடுத்து பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
மேலும் ஒரு நாளில் மொத்தம் 75,628 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை மொத்தம் 5,42,7,706 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய மீட்பு விகிதம் 83.70 ஆக உள்ளது.
தொற்று பாதித்த 9,44,996 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு விகிதம் 1.56 ஆக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,32,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வெள்ளிக்கிழமை வரை பரிசோதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மாதிரிகள் 7,78,50,403 ஆக உள்ளது.
இந்தியாவில் உச்சபட்ச பாதிப்பாக மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தில் தொற்று அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா நிலவரம்
பாதிப்பு - 6,47,3,544
குணம் - 5,42,7,706
சிகிச்சை - 9,44,996
பலி - 100,875
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...