பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரூ.72,000 கோடிக்கு தீபாவளி விற்பனை: நஷ்டத்தில் சீன வர்த்தகம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி நாட்டின் முக்கியச் சந்தைகளில் 72,000 கோடிக்கு வர்த்தகமானதாக அனைத்திந்திய வர்த்தகர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

News image
ரூ.72,000 கோடிக்கு தீபாவளி விற்பனை: நஷ்டத்தில் சீன வர்த்தகம்
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி நாட்டின் முக்கியச் சந்தைகளில் 72,000 கோடிக்கு வர்த்தகமானதாக அனைத்திந்திய வர்த்தகர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், சீனப் பொருள்களை புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தால், சீன வர்த்தகம் சுமார் 40 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில், நாட்டின் 20 முக்கிய நகரங்களில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.72,000 கோடிக்கு வர்த்தகமானதாகவும், அதே வேளையில், சீன வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடிக்கு இழப்பை சந்தித்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

வீட்டு உபயோகப் பொருள்கள், கைக்கடிகாரம், தங்க நகைகள், காலணி, ஆடைகள், பொம்மைகள் என ஏராளமான பொருள்கள் இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விற்பனையாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் போது, சீனப் பொருள்களை புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை அனைத்திந்திய வர்த்தகர்களுக்கான கூட்டமைப்பு கொண்டு வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.